இண்டர்நெட்டில் நிறைய வருமானம் தரும்
இணையதளங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் எப்படி வேலை செய்ய வேண்டும் என்பது தான்
நம்மில் பலருக்கு தெரியவில்லை. அதனால் தான் நான் அதில் எப்படி வேலை செய்ய
வேண்டும் என்று உங்களுக்கு சொல்லித்தரப் போகிறேன்.
இந்த இணையதளத்தில் சேருவதும், பணம்
சம்பாதிப்பது அனைத்தும் இலவசம். இதற்காக நீங்கள் எந்தவொரு முதலீடும் செய்ய
தேவையில்லை இங்கே தேவைப்படுவதெல்லாம் பொறுமை மற்றும் முயற்சி என்பவையே
ஆகும்.முதலில் வேலை செய்வதற்கு முன் நமக்கு என்ன தேவை என்பதை பற்றி
தெரிந்து கொள்வோம்.
- INTERNET CONNECTION உள்ள ஒரு சொந்தமான ஒரு COMPUTER.[ஏனென்றால் ஒரு கம்ப்யூட்டர். ஒரு அக்கவுண்ட் மட்டுமே உருவாக்க முடியும். (புரோசிங் சென்டரில் போய் செய்ய இயலாது)]
- உங்களுக்கென்று ஒரு E-Mail முகவரி
- Paypal அல்லது Payza என்ற இணையதளத்தில் ஒரு FREE Account
- சிறிதளவு ஆங்கில அறிவு (படித்து புரிந்து கொள்ளும் அளவு)
- நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை Online Banking Accounts ஏதாவது ஒன்றின் மூலமாக மட்டுமே பெற முடியும்.
வாங்க இனி இண்டர்நெட்டில் சம்பாதிக்கலாம் ,மிக எளிதாக வீட்டில் இருந்தபடியே வருமானம் பெறலாம்
இணையத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது
எப்படி?? வீட்டில் இருந்தபடியே இணையதளத்தின் மூலமாகப் பணம் சம்பாதிக்க
முடியும் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ‘ஐந்தாயிரம் கட்டினால்
மாதம் ஐம்பதாயிரம் வரை சுலபமாகச் சம்பாதிக்கலாம் என்ற உள்ளூர் விளம்பரங்கள்
தொடங்கி, டாலர்களில் பணத்தை இணையதளத்தில் செலுத்தச் சொல்லும் பன்னாட்டு
விளம்பரம் வரை ஏராளமான கவர்ச்சிகரமான விளம்பரங்களை எங்கெங்கும்
பார்க்கிறோம்.
ஆனால்?? உண்மையிலேயே இணையதளத்தின் மூலம்
சுலபமாகச் சம்பாதிக்க முடியுமா? முடியுமெனில், எப்படி? எங்கிருந்து
தொடங்குவது? என்பதில்தான் பலருக்கும் குழப்பம்? இந்த விஷயத்தில் பொதுவாக
இரண்டு விதமான மாயைகள் நிலவுகின்றன. ஒன்று "அடிப்படைக் கணிணி அறிவை மட்டும்
வைத்துக்கொண்டு நம்மாலெல்லாம் இணையதளத்தில் சம்பாதிக்கவே இயலாது" என்று
தீர்மானிப்பது. இரண்டு "விளம்பரங்களில் வருவது போல் பலருக்கு மின்னஞ்சல்
அனுப்புவது, விளம்பரங்களைச் சொடுக்குவது போன்றவை மூலமாகவே சுலபமாக
ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று நம்புவது" . இவை இரண்டுமே இரண்டு
துருவத்தைச் சேர்ந்தவை.
இணையத்தின் மூலம் கண்டிப்பாகப் பணத்தைச்
சம்பாதிக்க முடியும். இதில் சந்தேகமே இல்லை. இதற்கு கணிணியில் நிபுணத்துவம்
பெற்றிருக்கவேண்டும் என்ற தேவையுமில்லை. அதே சமயம் அது பண மரத்தினை[Money
Tree] உலுக்கிப் பணத்தை எடுத்துவருவது போல் மிகச் சுலபம் என விளம்பரங்கள்
சொல்வதும் வடிகட்டின முட்டாளின் அப்பட்டமான பொய்தான்.
முதலில் ஒன்றை நாம் நினைவில் கொள்ள
வேண்டும். Easy Money என்று எதுவும் கிடையாது. உழைப்பில்லாமல் சம்பாதிப்பது
என்பது கனவில் மட்டுமே நடக்க முடியும். நேர்மையாக, நாணயமாக ஆனால்
உழைப்பின்றிப் பணத்தைச் சம்பாதிப்பது என்பது இயலாது. அதுவும்,
இணைத்தளத்தில் நீங்கள் சம்பாதிக்கவேண்டுமெனில் விடாமுயற்சியும் பொறுமையும்
அவசியம்.
நீங்கள் உண்மையான ஆர்வத்தோடும்,
அக்கறையோடும் உழைத்தால், வீட்டில் இருந்தபடியே இலட்சஇலட்சமாக
சம்பாதிக்கலாம். SOFTWARE COMPANY மற்றும் MOBILE COMPANY இல்
வேலைபார்க்கும் உங்கள் நண்பரை விடக்கூட அதிகமாகவே உங்களால் சம்பாதிக்க
முடியும். அதற்கு வழிகாட்டுவதுதான் இவ்விணையதளத்தின் நோக்கமாகும்.
இணையத்தில் சம்பாதிக்க என்னென்ன தேவை?
ஏதாவது நிறுவனத்திற்குப் பணம் கட்டி ஆலோசனை பெறவேண்டுமா? கண்டிப்பாகத்
தேவையில்லை. இவ்வளவு பணம் அனுப்புங்கள்… நீங்கள் இணையத்தில் சம்பாதிக்க
நாங்கள் கற்றுத்தருகிறோம் என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.
இணையதளத்தின் மூலமாகச் சம்பாதிப்பதில் என்னென்ன வசதிகள்?
ஒன்று: சுதந்திரம் – நீங்களே முதலாளி,
நீங்களே தொழிலாளி. விரும்பும் நேரத்தில், விரும்பும் இடத்தில் இருந்து பணி
செய்யலாம். போக்குவரத்து அலைச்சல் இல்லை. வெளியூருக்குச் சென்றிருந்தாலும்,
உள்ளூரில் இருந்தாலும் தடைப்படாமல் வேலை செய்யலாம்.
இரண்டு : வருமானம் – இவ்வளவுதான் சம்பளம்,
இவ்வளவு நேரம்தான் வேலை என்பது இல்லை. உங்கள் சம்பாத்தியத்தை நீங்களே
தீர்மானிக்க முடியும். உடல் நலமும் உற்சாகமும் ஊக்கமும் இருந்தால் உங்கள்
வருமானத்தில் எல்லையும் விரிந்துகொண்டே போகும். உங்கள் திறமை, ஒதுக்கும்
நேரம், உழைப்பு, கற்றுக்கொள்ளும் வேகம் இவற்றைப் பொறுத்து உங்கள்
வருமானமும் அதிகரிக்கவோ குறையவோ செய்யலாம்.
மூன்று: அபாயமின்மை சொந்தமாக நீங்கள் ஒரு
தொழில் தொடங்கினால், அதில் எத்தனையோ அபாயங்கள் உண்டு. சிக்கல்களும் உண்டு.
நீங்கள் முதல் போடவேண்டும். தொழில் தொடங்க அனுமதி வாங்கவேண்டும்.
சந்தைப்படுத்துதல், உற்பத்தி செய்தல் என்று பல உண்டு. நீங்களே
எல்லாவற்றையும் செய்ய இயலாது என்பதால் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
நட்டமேற்பட்டாலோ, கடனாளியாகிவிட நேரும் அபாயம் உண்டு. இணையதளம் மூலம்
தொழிலில் இறங்குகையில் குறைவான பணம் போதுமானது.
நான்கு: வளரும் தேவை: இணையதள சந்தை
வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. பலதரப்பட்ட பொருட்களும் இணையதளத்தில்
விற்பனை ஆகின்றன. மக்கள் நீண்ட தூரம் சென்று அலைந்து திரிந்து வாங்குவதை
விட, இணையதளத்தின் மூலம் வாங்குவது வசதியானது, எளிமையானது என்று கருதத்
தொடங்கிவிட்டனர். பல நிறுவனங்களும், வேலைக்கு ஆள் எடுப்பதை விட,
சுயேச்சையாக இணையதளத்தில் பணிபுரிபவர்களிடம் வேலையைக்கொடுப்பது லாபகரமானது
என்று எண்ணுகிறார்கள். இதனால், சந்தைப்படுத்துதல், கணிணிப்பணிகளுக்கான
வேலை வாய்ப்பு கூடிக்கொண்டே இருக்கிறது.
ஐந்து: கற்றலில் எளிமை: நீங்கள் ஒரு
மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேரவேண்டுமெனில் படிப்புக்கான
சான்றிதழ்கள் வேண்டும். ஒரு கணக்கியல் துறையில் பணி வேண்டுமென்றால்
அதற்குப் படித்திருக்கவேண்டும். ஆனால், இணைத்தளத்தில் கற்றுக்கொள்வதும்
எளிது, உங்களுக்குப் பணி கொடுப்பவர்களும் உங்கள் வேலைத்திறனைப்
பார்ப்பார்களே தவிர தகுதிச் சான்றிதழ் கேட்க மாட்டார்கள். சராசரித்
திறனும், கற்பதில் விருப்பமும் உள்ள என் நண்பர், (இணைத்தளத்தினை மின்னஞ்சல்
பார்ப்பதற்கு மட்டும் பயன்படுத்தி வந்தவர்) ஓரிரு வருடங்களாக வலைப்பணி
புரிகிறார். மென்பொருள் நுட்பம் எதுவும் அவருக்குத் தெரியாது. ஆனால் இன்று
இணையதள நிர்மாணங்கள், பராமரிப்பு இவற்றின் மூலமாக மாதம் பல ஆயிரம் ரூபாய்
வரை சம்பாதிக்கிறார். இது மிகைப்படுத்தப் பட்டதில்லை. உண்மையான உண்மை.
ஆறு: அதிக வேலை வாய்ப்பு: நீங்கள்
விற்பனையாளராக இருந்தால், உலகத்தில் எந்த மூலையில் இருப்பவருக்கும் பொருளை
விற்பனை செய்யலாம்.பணி புரிபவராக இருந்தால், எந்த நாட்டில்
இருப்பவருக்காகவும் பணி புரியலாம். உங்கள் வட்டம் விரிவடைவதால்
வாய்ப்புகளுக்கும் பஞ்சம் இருப்பதில்லை.
ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள்
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க நினைத்து
உங்களில் நிறைய பேர் தோல்வியடைந்து இருப்பீர்கள். சில பேர் இன்னும் முயற்சி
செய்துகொண்டிருப்பீர்கள். உண்மையில் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதென்பது
சாதாரண விஷயமோ அல்லது ஒரிரு நாட்களில் சாத்தியமாகும் விஷயமோ கிடையாது.
இன்றைய நிலவரப்படி பணம் தரும் உண்மையான தளங்களை விட போலியான தளங்களே இங்கு
அதிகம் உள்ளன. அனுபவ சாலிகள் ஓரிரு வருடம் ஏமாந்து பிறகு உண்மையான வழிகளை
கண்டுபிடித்துப் பணம் ஈட்டுகிறார்கள்.
புதியவர்கள் தோற்றுக்கொண்டே
இருக்கிறார்கள். நானும் தோற்றுக்கொண்டு இருந்தவன்தான். பின் 3
வருட அனுபவத்தின் மூலம் இன்று ஒரு நிலையை அடைந்துள்ளேன்.புதியதாய்
வருபவர்கள் என்னைப்போல் ஏமாறாமல் உடனே நல்ல வழியில் சென்று பணம்
ஈட்டுவதர்க்காவே இந்த பதிவு.... ஏன் இவ்வளவு கடினம் என்று
நீங்கள் நினைப்பீர்கள்.
இணையதளம் என்பது அனைவருக்கும் பொதுவானது.
யார் வேண்டுமென்றாலும் உருவாக்கலாம். யார் வேண்டுமென்றாலும்
உபயோகப்படுத்தலாம். எனவே எதையும் உண்மையை என்று சொல்ல முடியாது. எனவே
நம்பகமான தளங்களையும் உங்களுக்கு சொல்கிறேன். அதற்க்கு முன்பு என்னென்ன
வழிமுறைகள் இருப்பதென்பதைப் பார்போம்.
இணையதளத்தில் பணம் ஈட்ட சில வழிமுறைகள் இருக்கிறது. அவை
1. PTC(Paid to click) இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதித்தல்.
2.Online surway
3. நமது own website or blog மூலம் சம்பாதித்தல்.
4.Youtube மூலம் சம்பாதித்தல.
5. Online Data entry மூலம் சம்பாதித்தல்.
- PTC(Paid to click) இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதித்தல்.
இது ஒரு பெரும்பாலான அனைவராலும் சுலபமாக
பணம் சம்பாதிக்கும் வழிமுறை. PTC தளங்கள் விளம்பரங்களை அடிப்படையாகக்
கொண்டு இயங்குகிறது. நாம் ஒரு PTC தளத்தில் இலவச உறுப்பினரானவுடன் அங்கு
login செய்தால் நாம் பார்வையிடுவதற்காகவே சில விளம்பரங்களை
வைத்திருப்பார்கள். நாம் அதை click செய்தால் ஒரு குறிப்பிட்ட தொகை நமது
Account இல் credit ஆகும். இவ்வாறு நாம் செய்யும் வேலை மூலம் நாம் தொகை
அதிகரிக்க அது 1$ அல்லது அந்த தளத்தின் வகையைப் பொறுத்து ஒரு தொகை
சேர்ந்தப்பின் அவற்றை நாம் Online net banking என்று சொல்லப்படும் Payza,
Paypal,Skrill, Neteller போன்றவற்றிற்கு மாற்றி, நம் Bank account
அல்லது cheque மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.
- Online surway
இதுவும் கிட்டத்தட்ட PTC மாதிரிதான்.
Surway website கலில் நாம் இணைந்தவுடன் அவர்கள் கேட்க்கும் சில
கேள்விகளுக்கு நாம் பதிலளித்துக்கொண்டே வந்தால் அந்த surway முடிந்தவுடன்
ஒரு குறிப்பிட்ட தொகையை நமது Account ல் சேர்ப்பார்கள். அந்த தொகையை நாம்
மேல் கண்டவாறு ஒரு குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் பெற்றுக்கொள்ளலாம்.
- நமது own website or blog மூலம் சம்பாதித்தல்.
நாம் ஒரு இணையதளம் அல்லது வலைதளத்தை
புதிதாக உருவாக்கி அதில் விளம்பரங்களை ஒட்டுதல்(past) மூலம் பணம்
சம்பாதிக்கலாம். இதில் பெரும்பாலும் Google Adsense மூலம் பணம் சம்பாதித்து
வருகிறார்கள். இதைப் பற்றியும் நாம் முழுமையாக பிறகு பார்க்கலாம்.
- Youtube மூலம் சம்பாதித்தல் .
இதுவும் ஒரு நல்ல சுலபமான் வழி முறைதான்.
அதாவது Youtube ல் வீடியோக்களை Uplaod செய்தால் அந்த வீடியோ எத்தனை தடவை
பார்க்கப்படுகிரதோ அதற்க்கேற்றவாறு ஒரு தொகையை Youtube நமது Account ல்
போடும்.
- Online Data entry மூலம் சம்பாதித்தல்.
இந்த முறையில் அதிகம் போலி மற்றும் முதலீடு
கேட்க்கும் தளங்களே அதிகம் உள்ளன.இருப்பினும் சில தளங்கள் உண்மையாக
முதலீடில்லாமல் இயங்கி வருகிறது. அவர்கள் கொடுக்கும் சில Data entry வேலையை
நாம் செய்து முடித்தல் மூலம் சம்பாதிக்கலாம். மேல் குறிப்பிட்டவற்றில் முக்கியமான, அதிகம் பேர் சம்பாதிக்கும் NEUBUX PTC(Paid to click) இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதித்தல். பற்றி விரிவாக காண்போம்....
2 கருத்துகள்:
இது இப்பொழுது இருக்க
Casino Online – Kadang Pintar
Kadang Pintar is an Indian online gambling platform, established in 2012. The casino's games are mainly online slots, casino kadangpintar games,
கருத்துரையிடுக